cinemaindiaஇந்தியா

நடிகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்.. கலாபன் மணி மரணத்துக்கு மதுவே காரணம்! ஐபிஎஸ் பரபர

திருவனந்தபுரம்: அளவுக்கு அதிகமாக பீர் குடித்ததன் காரணமாகவே மலையாள நடிகர் கலாபவன் மணி கல்லீரல் செயலிழந்து உயிரிழந்தார் என கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்து உள்ளார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கலாபவன் மணி. இவர் தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே மரணத்துக்கு காரணம் என கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்து உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி இவர் கேரளாவில் உள்ள சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது மரணம் கொலையாக இருக்குமோ என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது மரணம் குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி உன்னிராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை என அவர் கூறி இருக்கிறார். கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை என அதிர்ச்சி தகவலை அவர் கூறி இருக்கிறார். மரணத்தை கலாபவன் மணியே தேடிக் 4 கொண்டதாக விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வேதனை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button