பாஜக ஆதரவாளரான யூடியூபர் கைது.. அண்ணாமலை கண்டனம்..!
யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, இளைய பாரதம் என்னும் யூடியூப் சேனலை நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த கோயில் படத்தை காண்பித்து, இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அரவிந்த்குமார் போலீசில் புகார் அளித்தார்.
இதனிய அடுத்து சென்னையில் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி மாநகர காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கார்த்திக் கோபிநாத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420, 409 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் கைது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தங்களுக்கு எதிராக பேசுவோரை மிரட்டும் உத்தியை தமிழக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.