கழிவறை சுவற்றில் முகலாய மன்னர் அவுரங்கசீப் குறித்து போஸ்டர் ஒட்டிய பாஜக தலைவர் செயலால் சர்ச்சை
டெல்லியில் கழிவறை சுவற்றில் அவுரங்கசீப் குறித்து அச்சிடிக்கப்பட்ட சுவரொட்டியை பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய உள்ளது

டெல்லி பாஜக கட்சியின் மூத்த நிர்வாகியாக இருப்பவர் அச்சல் சர்மா. இவர் உத்தம் நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் இன்று காலை முகலாய மன்னர் அவுரங்கசீப் பெயர் அச்சிடப்பட்டிருந்த சுவரொட்டியை ஒட்டினார்.
இதனால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆதரவாக பாஜக தொண்டர்கள் அங்கு வந்து, பின்னர் அங்கிருந்தபடியே அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “வாரணாசி ஞானவாபி மசூதியில் இருந்து சிவலிங்கம் உள்ளிட்ட இந்து கடவுள்களின் சிலைகளை 500 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் மறைத்து வந்துள்ளனர். இது முஸ்லிம்கள் செய்த மிகப்பெரிய தவறு. அதனை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே அவுரங்கசீப் பெயரிலான சுவரொட்டியை கழிவறையில் ஒட்டியுள்ளேன். அங்கிருந்த இந்து கோயிலை அழித்து மசூதி கட்டியவர் அவுரங்கசீப் தான்.
இதேபோல, அனைத்து இந்துக்களும் தங்கள் பகுதியில் உள்ள பொது கழிவறையில் அவுரங்கசீப் பெயர் கொண்ட சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்” என அவர் கூறினார்.