இந்தியாமறைக்கப்பட்டவை
ஐஎஸ்ஐக்கு உளவு சொன்ன ஷர்மா… விமானப்படை அதிகாரியாம் – கைது செய்த போலீஸ்
ஐஎஸ்ஐக்கு உளவு சொன்ன விமானப்படை அதிகாரி டெல்லியில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தேவேந்திர குமார் ஷர்மா எனும் விமானப்படை சார்ஜன்ட் வீட்டில் சோதனை செய்த டெல்லி போலீசுக்கு அவரது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் கணக்கில் வராத பெருந்தொகை வங்கி மூலமாக கைமாறப்பட்டுள்ளதை வைத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர், அவரது வீட்டில் இந்திய விமானப்படை ரகசியங்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களுக்கு கணினி வாயிலாக அனுப்பிக்கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளனர். தேசவிரோத வழக்கில் ஷர்மா கைது செய்யப்பட்டு விசாரணைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.