BREAKING: அடுத்த டார்கெட்.. அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு வீடு, அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையிட்டு வருமின்றனர். சுமார் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்து திமுக முக்கிய நிர்வாகிகளை மத்திய அரசின் நிறுவனங்கள் குறிவைத்து ரெய்டு நடத்துவது தொடர் கதையாகி உள்ளது.