கல்விசமூக வலைதளம்தமிழ்நாடு
கதறி அழுத மாணவிகள்.. நடிகர் தாமுவை கைது செய்ய வேண்டும் – பத்திரிகையாளர் நெல்சன் சேவியர்

சென்னை: நடிகர் தாமு பேச்சை கேட்டு அரசு பள்ளி மாணவிகள் கதறி அழுத நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் நெல்சன் சேவியர்.
எக்ஸ் தளற்றில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “இது மோசமானது. எப்படி பள்ளி நிர்வாகங்கள் இதை ஏற்பாடு பண்றாங்க. மனதளவுல ஆக்கபூர்வமா நேர்மறையா மாணவர்களை தயார் செய்ய வேண்டிய இடம் பள்ளிக்கூடங்கள். நம்பிக்கைய விதைக்க வேண்டிய இடம் வகுப்பறைகள். அவங்களை குற்றவாளிகளாக்கி அழ வெச்சுட்டு இருக்கீங்க. மனசை மோசமா பாதிச்சு அவங்க அடிப்படை நம்பிக்கையையே இது சிதைக்கும். 18 வயது கூட நிரம்பாத மாணவர்களை Guilt Trap பண்ணி மோசமான உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்குறாரு நடிகர் தாமு. நியாயமாய் பார்த்தால் தாமுவைக் கைது செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.