சிறுநீர் கழித்து..
நிர்வாணமாக தாக்கி..
நெல்லை சாதிய பயங்கரம்

இது குறித்து விசிகவை சேர்ந்த சங்கத் தமிழன் தெரிவித்துள்ளதாவது, “என்று தணியும் இந்த சாதி வெறி?
திருநெல்வேலி மாநகர பகுதியிலுள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து வரும் இரண்டு பட்டியலின தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர்கள்
1.மனோஜ்குமார். 2.மாரியப்பன்.
ஆகியோர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் மீது சாதிய கேட்டு பிறகு பகுதியைச் சார்ந்தவன் என்று கேட்டு அதன் பிறகு தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்திய
மறவர் சாதிவெறிபிடித்த மனநோயாளிகள் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து ஆடைகளை களற்றி, உடமைகளை (செல்போன், ATM கார்டு, இடுப்பில் அணிந்திருந்த வெள்ளிக் கொடி, இருசக்கர வாகனம் போன்றவைகளை) பிடுங்கி வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்கள்.
இப்படிப்பட்ட கீழ் செயல்களில் ஈடுபட்ட மனநோயாளிகளை கண்டித்து சனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நெல்லை சந்திப்பு இரயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முத்து வளவன் தலைமையில் நடத்தப்பட்டது. இதுவரையிலும் தேவேந்திர குல வேளாளர்களை வைத்து அரசியல் செய்யும் எந்த அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சந்திக்கவில்லை!
அதே நேரத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ சந்தித்து ஆறுதல் வழங்கவில்லை அண்ணா திமுக, பிஜேபி, சீமான் இதுவரை வாய் திறக்கவில்லை! உண்மையை உணர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் தேவேந்திர குல வேளாளர்களே ஒன்று சேருங்கள்!!” என்று குறிப்பிட்டு உள்ளார்.