TAMIL NEWSஅரசியல்மக்கள்மறைக்கப்பட்டவை

நீரோடை வழித்தடம் ஆக்கிரமிப்பு… தட்டிக்கேட்டவரை மிரட்டிய பஞ்சாயத்து துணைத் தலைவர்

கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியில் நீரோடை வழித்தடத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்திற்கு பாதை_ நியாயம் கேட்கச் சென்ற அப்பகுதி மக்களுக்கு மிரட்டல் விடுத்த பஞ்சாயத்து துணை தலைவர்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கடம்பூர் அருகே சிதம்பராபுரம் பகுதியில் அச்சன்னா என்பவரது மகன்கள் அழகிரிசாமி, சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே நீர் வழித்தடம் செல்கிறது. மழைக்காலத்தில் நீரோடை வழியாகத்தான் மழைநீர் செல்கிறது.

தற்போது தனியார் நிறுவனம் காற்றாலை அமைப்பதற்கு அப்பகுதி வழியாக வழித்தடம் ஏற்படுத்தி தரபட்டு வருகிறது இதனால் நீரோடையை ஆக்கிரமித்து மூடியதால் பல்வேறு விவசாய நிலங்கள் இதனால் பாதிப்படையும் மழைக்காலங்களில் அந்த நீரோடையை செல்லும் மழை நீர் தங்கள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடும். இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும்.

எனவே நீரோடை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பஞ்சாயத்து துணை தலைவர் சுப்புராஜிடம் சென்று முறையிட்டபோது, ”ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது நீ என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்.” என்று மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்ததால் அதிர்ச்சி அடைந்த அழகர்சாமி கடம்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button