ரெடியா இருங்க.. நாளை 12 மாவட்டங்களை கனமழை கொட்டப்போகுது! சென்னைக்கும் அலர்ட்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “நேற்று (08-11-2023), மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (09-11-2023) அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.11.2023 முதல் 14.11.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 23, பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 15,
மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 14, நம்பியூர் (ஈரோடு) 12, அவினாசி (திருப்பூர்) 12, ஆழியார் (கோயம்புத்தூர்) 11, TNAU கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 10, வத்திராயிருப்பு (விருதுநகர்), தூத்துக்குடி, பவானிசாகர் (ஈரோடு), விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 9, கொத்தவாச்சேரி (கடலூர்), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), குன்னூர் PTO (நீலகிரி), மேலூர் (மதுரை), திருப்பூர் PWD, ஆண்டிபட்டி (தேனி), களியல் (கன்னியாகுமரி) தலா 8, கோயம்புத்தூர்-தெற்கு , ராமநாதபுரம், பரங்கிப்பேட்டை (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), இடையப்பட்டி (மதுரை), ராமநாதபுரம் KVK AWS, , மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), பூதலூர் (தஞ்சாவூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), கடலாடி (ராமநாதபுரம்), களக்காடு (திருநெல்வேலி) தலா 7, பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), மணியாச்சி (தூத்துக்குடி), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கொடுமுடி (ஈரோடு), வடகுத்து (கடலூர்), எழுமலை (மதுரை), கல்லிக்குடி (மதுரை), திருச்செந்தூர் (தூத்துக்குடி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 6, எட்டயபுரம் (தூத்துக்குடி), திருமங்கலம் (மதுரை), குப்பநத்தம் (கடலூர்), சாத்தியார் (மதுரை), கோவில்பட்டி (தூத்துக்குடி), திருப்புவனம் (சிவகங்கை), தம்மம்பட்டி (சேலம்), நாகப்பட்டினம், , கமுதி (ராமநாதபுரம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), விருதாச்சலம் (கடலூர்), புலிப்பட்டி (மதுரை), கோடநாடு (நீலகிரி), தானியமங்கலம் (மதுரை), செருமுள்ளி (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), விருதுநகர் AWS (விருதுநகர்), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), குழித்துறை (கன்னியாகுமரி), திருப்போரூர் (செங்கல்பட்டு), சிங்கம்புணரி (சிவகங்கை), சூலூர் (கோயம்புத்தூர்), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), கோயம்புத்தூர் விமான நிலையம், சிட்டம்பட்டி (மதுரை), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 5, தாளவாடி (ஈரோடு), காக்காச்சி (திருநெல்வேலி), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம், சிற்றாறு-I (கன்னியாகுமரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), சத்தியமங்கலம் (ஈரோடு), வாடிப்பட்டி (மதுரை), கின்னக்கோரை (நீலகிரி), இளையாங்குடி (சிவகங்கை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), வீரபாண்டி (தேனி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), கல்லந்திரி (மதுரை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), செங்கோட்டை (தென்காசி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), தல்லாகுளம் (மதுரை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), கழுகுமலை (தூத்துக்குடி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), நாகர்கோயில் (கன்னியாகுமரி), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), எமரால்டு (நீலகிரி), கேத்தி (நீலகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), கொடவாசல் (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பேரையூர் (மதுரை), நத்தம் (திண்டுக்கல்), மேட்டுப்பட்டி (மதுரை), மதுரை நகரம், தக்கலை (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), ஆண்டிபட்டி (மதுரை) தலா 4, செங்கல்பட்டு, பாலமோர் (கன்னியாகுமரி), வேப்பூர் (கடலூர்), பெரியபட்டி (மதுரை), அன்னூர் (கோயம்புத்தூர்), குண்டாறு அணை (தென்காசி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வைப்பாறு (தூத்துக்குடி), தேவாலா (நீலகிரி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), ஆத்தூர் (சேலம்), கயத்தார் (தூத்துக்குடி), மதுரை விமானநிலையம், கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), பார்வூட் (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), மஞ்சளாறு (தேனி), தலைவாசல் (சேலம்), புவனகிரி (கடலூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), காரைக்கால், உதகமண்டலம் (நீலகிரி), சிவகிரி (தென்காசி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சிவகங்கை (சிவகங்கை), RSCL-2 கெடார் (விழுப்புரம்), காரைக்குடி (சிவகங்கை), பண்ருட்டி (கடலூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), அரிமளம் (புதுக்கோட்டை), குந்தா பாலம் (நீலகிரி), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), கடலூர் (கடலூர்), லக்கூர் (கடலூர்), ஊத்து (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), நிலக்கோட்டை (சென்னை), வனமாதேவி (கடலூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தொண்டி (ராமநாதபுரம்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), வைகை அணை (தேனி), சோழவந்தான் (மதுரை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சாத்தூர் (விருதுநகர்), தழுதலை (பெரம்பலூர்), மேல் பவானி (நீலகிரி), திண்டிவனம் (விழுப்புரம்), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), சிவகாசி (விருதுநகர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) தலா 3, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), திருமயம் (புதுக்கோட்டை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), மீ மாத்தூர் (கடலூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), அரண்மனைப்புதூர் (தேனி), திருச்சுழி (விருதுநகர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மணல்மேடு (மயிலாடுதுறை), அவலாஞ்சி (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), பெரியகுளம் (தேனி), குப்பணம்பட்டி (மதுரை), காயல்பட்டினம் (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி), திருக்குவளை (நாகப்பட்டினம்), வட்டானம் (ராமநாதபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை), சண்முகாநதி (தேனி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பெரியகுளம் (தேனி), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), லால்குடி (திருச்சிராப்பள்ளி), ஊத்துக்குளி (திருப்பூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), விரகனூர் அணை (மதுரை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), அம்பத்தூர் (சென்னை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பாபநாசம் (திருநெல்வேலி), சிதம்பரம் (கடலூர்), வலங்கைமான் (திருவாரூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சூரங்குடி (தூத்துக்குடி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), திருவாடானை (ராமநாதபுரம்), கருப்பாநதி அணை (தென்காசி), முத்துப்பேட்டை (திருவாரூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பெலாந்துறை (கடலூர்), கிளன்மார்கன் (நீலகிரி), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), வி.களத்தூர் (பெரம்பலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), கல்லட்டி (நீலகிரி), லால்பேட்டை (கடலூர்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), சங்கரன்கோயில் (தென்காசி), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), கும்பகோணம் (தஞ்சாவூர்), திருநெல்வேலி (திருநெல்வேலி), காரியாப்பட்டி (விருதுநகர்), திருவாரூர், வெம்பக்கோட்டை (விருதுநகர்), காரையூர் (புதுக்கோட்டை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்), மரக்காணம் (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), கெத்தை (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ராதாபுரம் (திருநெல்வேலி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), வானூர் (விழுப்புரம்), அரியலூர் PTO, காட்டுமயிலூர் (கடலூர்), நாங்குனேரி (திருநெல்வேலி), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தேவகோட்டை (சிவகங்கை), அம்பத்தூர் (சென்னை), திருப்பத்தூர் (சிவகங்கை), அடையாமடை (கன்னியாகுமரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தேக்கடி (தேனி), பெருங்களூர் (புதுக்கோட்டை), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), கொட்டாரம் (கன்னியாகுமரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), புதுச்சேரி, நன்னிலம் (திருவாரூர்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), விராலிமலை (புதுக்கோட்டை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), துறையூர் (திருச்சிராப்பள்ளி), போளூர் (திருவண்ணாமலை), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), மண்டபம் (ராமநாதபுரம்), நாகுடி (புதுக்கோட்டை), பாம்பன் (ராமநாதபுரம்), தஞ்சை பாபநாசம், கரியகோவில் அணை (சேலம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே.எம்.கோயில் (கடலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கீழச்செருவை (கடலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), SRC குடிதாங்கி (கடலூர்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), கோடிவேரி (ஈரோடு), தாம்பரம் (செங்கல்பட்டு), ஆயிக்குடி (தென்காசி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), கூடலூர் பஜார் (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), சிதம்பரம் AWS (கடலூர்), சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), இரணியல் (கன்னியாகுமரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), BASL முகையூர் (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), அடவிநயினார் அணை (தென்காசி), செட்டிகுளம் (பெரம்பலூர்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), ஆனைமடுவு அணை (சேலம்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), சின்கோனா (கோயம்புத்தூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), அண்ணாமலை நகர் (கடலூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), பெருந்துறை (ஈரோடு), மேல் கூடலூர் (நீலகிரி), புதுச்சேரி AWS (புதுச்சேரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குளச்சல் (கன்னியாகுமரி), கூடலூர் (தேனி), மங்களபுரம் (நாமக்கல்), ஆயிங்குடி (புதுக்கோட்டை), தேர்வாய்கண்டிகை (திருவள்ளூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), பெரம்பலூர் (பெரம்பலூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), புதுக்கோட்டை, வீரகனூர் (சேலம்), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), பொன்னேரி (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), உத்தமபாளையம் (தேனி) தலா 1″ என குறிப்பிடப்பட்டு உள்ளது.