“நாட்டை ஆளும் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற அமைச்சர்கள் தகுதி தேர்வு எழுதவேண்டும்” -சிமான்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, போன்ற அரசு கட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நாட்டை ஆள தகுதியானவர்கள் என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட வழக்கின் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: பிரதமர் பொறுப்பு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது ஒரு முறை என்னை போன்ற செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசட்டும். மலையை உடைத்து எம் – சாண்ட் தயாரித்து ஊருக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மலையை அழித்தால் மீண்டும் உருவாக்க முடியுமா ? இயற்கை வளத்தை திட்டமிட்டு எல்லோரும் சேர்ந்து அழிக்கிறார்கள். இதையெல்லாம் ஏன் பாஜக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை.
உயர்நீதிமன்றம் ரபேல் ஊழல் விவகாரத்தில் கோப்புகளை கேட்ட போது காணாமல் போனது என்று கூறிய பாதுகாப்பு துறை எப்படி நாட்டை பாதுகாக்கும். 8 ஆண்டுகளில் பா.ஜ.க சாதித்தது என்ன என்று ஒன்றைக் கூற சொல்லுங்கள்? நீட், எக்சியூட் என்று எத்தனை தேர்வுகளை கொண்டுவருகிறார்கள் ஏன் நாட்டை ஆளும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் தேர்வு எழுதக் கூடாது ? மோடி, அமித்ஷா உள்ளிட்ட அனைவருமே தேர்வெழுத வேண்டும்.
ஒவ்வொரு துறைகளிலும் தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும்தான் அரசியல் தலைவர்களாக உருவாக்க வேண்டும் என கூறினார்.