தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு.. டிவிட்டரில் #GoBackModi டிரெண்டிங்..!

மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். நேரு ஸ்டேடியத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்து பேச உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்த போது திமுக கடுமையாக எதிர்த்த நிலையில், இந்த முறை பிரதமரை தமிழக அரசின் விருந்தாளியாக பார்க்கிறது.
இதனிடையே தமிழக மக்கள் #GoBackModi என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.