அரசியல்கருத்துக்கள்தமிழ்நாடு
திடீரென அதிமுகவை பாராட்டிய தினகரன் – என்ன விசயமா இருக்கும்?
”2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட்டு வருகிறது. இந்தி திணிப்பை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்”

திருவாரூர்: திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது, ”வாக்களித்த மக்களுக்கு, திமுக ஆட்சி சோதனையானது என நிரூபிக்கப்பட்டு வருகிறது. திமுக கூறியதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலேயே திமுக ஆட்சி உள்ளது.
அதிமுக ஆட்சிக்கு மாற்றாக திமுக ஆட்சியை மக்கள் கொண்டு வந்தனர். ஆனால் திமுகவின் சுயரூபம் வெளிப்பட்டு உள்ளது. இது 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட்டு வருகிறது. இந்தி திணிப்பை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசை விடியல் ஆட்சி எனக் கூறுவது தவறு. இருண்ட ஆட்சி எனக் கூற வேண்டும்.” என்றார்.