ஒரே ஜாதி.. ஆனால் ஏழை! காதல் ஜோடியை துடிதுடிக்க கொன்ற குடும்பம்! தூத்துக்குடியில் பகீர்

தூத்துக்குடி: காதல் திருமணம்செய்த ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகரை சேர்ந்தவர்கள் மாரிச்செல்வம் (24), கார்த்திகா (20). இருவரும் பல நாட்களாக காதலித்து வந்த நிலையில் பெண் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மாரிச்செல்வம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் எனக் கூறப்படுகிறது. இதனால் கார்த்திகாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே இருவரும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு முருகேசன் நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் வீடு புகுந்து வெட்டிக்கொன்று இருக்கிறார்கள். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., புறநகர் டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்புக்கப்பட்டு உள்ளது.