TAMIL NEWSதமிழ்நாடுவானிலை

உளுந்தூர்பேட்டையில் விழுந்த இடி – 10 வீடுகள் சேதம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் கனமழையின் போது வீட்டின் மீது இடி விழுந்தது பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பயன்படுத்திய மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் நகராட்சிக்குட்பட்ட மாடல் காலனி பகுதியில் வசித்து வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர் இயேசு என்கின்ற தர்ம ராஜ் என்பவர் அடுக்குமாடி வீட்டில் இடி விழுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்து உள்ளது கனமழையின் போது வீட்டின் மேல் இடி விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button