
உத்தரப்பிரதசத்தில் இந்து கோவில் மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் உள்ள மசூதிகளை ஆய்வு செய்ய கோரியும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தியது. இந்த விவாத வீடியோ தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த முகம்மது ஜுபைர் , சர்ச்சைக்குரிய இந்து சாமியார்களை வெறுப்பை கக்குபவர்கள் என விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக உ.பி. மாநிலம் கைராபாத் போலீசில், ராஷ்டிரிய ஹிந்து ஷேர் சேனா என்ற இந்துத்துவ அமைப்பின் மாவட்ட தலைவர் பகவான் சரண் என்பவர் முகம்மது ஜுபைர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
இப்புகாரின் பேரில் ஜுபைர் மீது உ.பி.போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜக மற்றும் இந்துத்துவாவினர் பரப்பும் பல பொய் செய்திகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது ஆல்ட் நியூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.