உத்தர பிரதேசத்தில் அப்பாவி முஸ்லிம் பெண்ணை சுட்டுக்கொன்ற காவல்துறை.. நடந்தது என்ன..?

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்நகர் கிராமத்தில் பசுவதை வழக்கில் தனது மகன் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து போராடிய ரோஷ்னி என்ற 53 வயது முஸ்லிம் பெண்ணை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இது குறித்து அவரது மகன் அதிர்குர் ரஹ்மான் கூறுகையில், சனிக்கிழமை இரவு சுமார் 15-20 போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து எந்த காரணமும் இன்றி சகோதரன் அப்துல் ரஹ்மானை கைது செய்தனர். இதனை எதிர்த்த அவரது தாய் ரோஷ்னியை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தார்.
இருப்பினும் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அப்துல் ரஹ்மானை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரோஷ்னியின் மகள் ரபியாவின் திருமணம் மே 22ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில் காவல்துறையினர் அவரைசுட்டுக்கொன்றுள்ளனர்.
பின்னர் காவல்துறையின் கொலையை எதிர்த்து கிராம மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து ரோஷினியை சுட்ட சித்தார்த் நகர் காவலர் மீது கொலைக் குற்றச்சாட்டின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.
இறந்த ரோஷினியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.