
ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் கலிஃபா பின் சயீது அல் நஹ்யான் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
கடந்த வெள்ளிக்கிழமை ஷேக் கலிஃபா பின் சயீது உடல்நலக் குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை காலமானாா்.
இதனை அடுத்து இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை அபுதாபி சென்றாா்.
அபுதாபி விமான நிலையத்திலிருந்து முஷ்ரிஃப் அரண்மனை சென்று அங்கு புதிய அதிபா் ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானைசந்தித்து அவரிடம் ஷேக் கலிஃபா மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தாா்.
மேலும், இந்தக் கடினமான தருணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்திய மக்கள் துணைநிற்கும் என்று குடியரசுத் தலைவா்தெரிவித்துள்ளார்.
அமீரகத்தின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானுக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கையாநாயுடு, அவரது தலைமையின்கீழ் இந்தியாவும் அமீரகமும் சிறப்பான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்லும் என்றார்.